தங்களின் வருகைக்கு நன்றி

தங்களின் வருகைக்கு நன்றி
output:

Wednesday, May 25, 2011

பதிவு செய்... திட்டமிடு...தாக்கு!



ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கதாநாயகனை லேசர் கதிர்கொண்டு, எதிரிகள் தாக்குவதைப் பார்த்திருப்போம். நாயகன் வளைந்து, நெளிந்து எங்கு, எப்படிச் செல்கிறாரோ... அப்படியே அந்தக் கருவியும் சென்று தாக்கும். அதே தொழில்நுட்பத்தில் அறிமுகமாகி உள்ளது, சைபர்நைஃப் எனும் அதிநவீன அறுவை சிகிச்சைக் கருவி. நோயாளி மூச்சுவிடும் அசைவைக்கூட கணக்கிட்டு, புற்று நோய்க் கட்டியை தாக்கி அழிக்கும் இந்தக் கருவி.


ஒரு காலத்தில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை சிக்கலானதாகவும், பக்கவிளைவுகள் நிரம்பியதாகவும், அதிக செலவுவைப்பதாகவும் இருந்தது. ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் காரணமாக, சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை முடிந்து நோயாளிகள் வீடு திரும்ப முடிகிறது.

அப்போலோ ஸ்பெஷாலிட்டி கேன்சர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டி.ராஜா இதுபற்றிச் சொல்கிறார். ''சில புற்றுநோய்களை மருந்து கொடுத்தே குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சையில் சில வகை குணமாகும். ஒரு சில வகைப் புற்று நோய்க்கு ரேடியேஷன் சிகிச்சைதான் சிறந்தது. எந்த உறுப்பை புற்று நோய் தாக்கி உள்ளது, எந்த வகையான புற்று நோய், எவ்வளவு தூரம் தாக்கி உள்ளது என்பதைப் பொறுத்தே, சிகிச்சை முறையை முடிவு செய்வோம். மார்பகப் புற்று நோய், வாய்ப் புற்று நோய் என்றால், அறுவை சிகிச்சையே சிறந்த தீர்வு. ஆனால், ரத்தப் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யாமல், கீமோதெரபி செய்ய வேண்டும். வியாதி அதிகமாகப் பரவி இருந்தால், குறிப்பிட்ட உறுப்பில் புற்று நோய் காரணமாக வலி அதிகமாக இருந்தால், கதிரியக்கம் கொடுப்பது மட்டுமே உடனடி ஆறுதல்.
ஆனால், கதிரியக்கம் கொடுக்கும்போது, சுற்றிலும் உள்ள நல்ல திசுக்களும் கதிரியக்கம் செல்லும் பாதையில் நிற்பதால் பாதிக்கப்பட்டது. அதனால் குறிப்பிட்ட உறுப்பில் உள்ள புற்றுக் கட்டிக்கு 50-60 கிரே கதிரியக்கம் கொடுக்க வேண்டும் என்றால், மொத்தமாக ஒரே பக்கத்தில் இருந்து கொடுக்காமல்... நான்கு பக்கங்களில் இருந்து, அந்த 50 கிரேவைப் பிரித்துக் கொடுத்தார்கள். இப்படி செய்வதால், சுற்றிலும் உள்ள நல்ல திசுக்களில் ரேடியேஷன் அளவு அதிக பாதிப்பை உண்டாக்காது.

புதிய தொழில்நுட்பத்தின்படி, ஸ்கேன் மற்றும் கம்ப்யூட்டரை இணைத்து, புற்றுக்கட்டியின் முப்பரிமாணத்தைத் துல்லியமாக காண முடிகிறது. நான்கு பக்கம் இருந்து கதிரியக்கம் கொடுத்ததைவிட, தற்போது மொத்த டோஸையும் பல பங்குகளாகப் பிரித்து பல கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி அழிக்கப்படுகிறது. இந்த புதிய சிகிச்சை முறையை ஸ்டீரியோடாக்டிஸ் என்பார்கள். சமீப காலங்களில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் இந்தத் துறையில் அடுத்த கட்டமாக ஐ.எம்.ஆர்.டி. மற்றும் ஐ.ஜி.ஆர்.டி. தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. மேலும் ரேடியோ சர்ஜரி என்ற தொழில்நுட்பமும் புழக்கத்தில் வந்துவிட்டது.
பொதுவாக கத்திவைத்து, அறுத்து செய்வதைத்தான் அறுவை சிகிச்சை என்போம். கத்தி இல்லாமல் உயர் ஆற்றல் பீம் ரேடியேஷனைக்கொண்டு புற்று நோய்க் கட்டியைப் பொசுக்கும் நுட்பத்தை இந்த அறுவை சிகிச்சையில் கொண்டுவந்தனர்.

இந்த அனைத்து சிகிச்சைக்கும் உச்சகட்ட வளர்ச்சியாக வந்து இருப்பது, சைபர்நைஃப். இது அதிக எண்ணிக்கையிலான ரேடியேஷன் பீம்களை பல்வேறு கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி மீது செலுத்தக்கூடியது. இதனுடன் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கேமரா, நோயாளிகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும். சுவாசித்தல், அசைதல்போன்ற சின்னஞ்சிறு அசைவுகளையும் பதிவு செய்து, ரோபோ கருவிக்கு அனுப்பிவைக்கும். உடனே ரோபோ தன்னை அதற்கு ஏற்றதுபோன்று சரிப்படுத்திக்கொண்டு, மிகத் துல்லியமாகப் பல்வேறு கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி மீது கதிரியக்கத்தைச் செலுத்தும். தாக்க வேண்டிய பகுதி மில்லி மீட்டரைவிடக் குறைவாக இருந்தாலும், இந்தக் கருவியால் துல்லியமாகச் சென்றடைய முடியும். இந்த சிகிச்சை மூலம் வலி இல்லாத, ரத்த இழப்பு இல்லாத, தழும்பு இல்லாத அறுவை சிகிச்சை புற்று நோயாளிகளுக்குக் கிடைக்கிறது.

இந்த சிகிச்சைக்கு, முதலில் நோயாளியை சி.டி. ஸ்கேன் செய்வோம். அதன் மூலம் புற்றுக்கட்டியின் அளவு, வடிவம், இடம்போன்றவை துல்லியமாகக் கண்டறியப்பட்டு, டிஜிட்டல் தகவல்கள் சைபர்நைஃப் கருவிக்கு அளிக்கப்படும். எப்படி சிகிச்சை அளிப்பது என்று திட்டமிடப்பட்டு, அதன்படி சைபர்நைஃப் கருவி நோயாளியைச் சுற்றி பல இடங்களில் இருந்து கதிரியக்கத்தைச் செலுத்தி புற்றுக் கட்டியைத் தாக்கி அழிக்கும். புற்றுக் கட்டியின் தன்மையைப் பொறுத்து, 30 முதல் 90 நிமிடங்கள் வரை சிகிச்சை நீடிக்கும். பல கட்டங்களாக சிகிச்சை அளிக்கப்படுவதாக இருந்தால், ஐந்து நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சையில் மிக மிகக் குறைந்த அளவே பக்க விளைவுகள் காணப்படுகின்றன. அதுவும் சிகிச்சை முடிந்த சில வாரங்களிலேயே சரியாகிவிடும். இந்த சைபர்நைஃப் கருவி, ப்ராஸ்டேட், நுரையீரல், முதுகுத் தண்டுவடம், மூளை, கல்லீரல், கிட்னி புற்று நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது'' என்றார்.

புற்றுநோயை பயமின்றி எதிர்கொள்ளும் நிலை சீக்கிரமே வரும் என நம்புவோம்!
- பா.பிரவீன்குமார், படம்: ச.இரா.ஸ்ரீதர்

 Thanks to
 
Vikatan


Tuesday, May 24, 2011

S.S.L.C ரிசல்ட்..!



இது ஒன்னும் கல்வி விழிப்புணர்வு கட்டுரையெல்லாம் இல்லை சும்மா கொஞ்சம் காத்து வாங்குறதுக்கு.

 பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. தெரிஞ்சா, 108 தேங்காய் உடைக்கணும் - அவர் தலை மேல.!
பின்ன என்ன சார்.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!
பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, டிவி பாக்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.
பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும்.
எட்டாவது நிமிஷம் டீ வரும்.
அம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' எம்ஜியார் (சயின்டிஸ்ட் முருகன்!) லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.
பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு டிவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.
எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.? சினிமா பாட்டு கேக்கணும்னு ஏன் அவ்ளோ ஆசையா இருக்குது?
ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், சினிமா, ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..
காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து டிபன், மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி எவன் வீட்டுக்காவது போய் செஸ் இல்லாட்டி கேரம் போர்டு ஆடிகிட்டே அரட்டை, டிவி, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.
"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் மே மாதம்.. " ஐயையோ.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே..
நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.
இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை.. ?"னு அப்பா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். அப்பா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை அப்பாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?
அப்பா நகர்ந்ததும் அம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? உங்க அத்தை ஏற்கனவே என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா உங்க அப்பா பக்கத்து உறவுக்காரங்களுக்கு ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!
மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த அப்பா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!
அப்பா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத அப்பாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!