தங்களின் வருகைக்கு நன்றி

தங்களின் வருகைக்கு நன்றி
output:

Wednesday, June 1, 2011

அதிரை பைத்துல்மால் குர்ஆன் மாநாடு ஏன்...?


அதிரையின் தொண்டு நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க சேவைகளை செய்து வருவதில் அதிரை பைத்துல்மாலின் சேவை அதி முக்கியமானது
எத்தனையோ சேவை நிறுவனங்கள் துவங்கப்பட்டும் சில தொய்வான  சேவைகளாலும், சில் இருந்த இடம் தெரியாமல் இருப்பதும், நாம் எல்லோரும் அறிந்ததே
இருப்பினும் துவங்கப்பட்டது முதல் எத்தனையோ இடையூறுகள் வந்தபோதும் அதையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு வீற்றிருப்பதில்,  அதிரை பைத்துல்மால் தனித்திருக்கிறது.

இவ்வமைப்பின் செயல்பாடுகளில் மிக முக்கியமானது திருக்குர்ஆன்  மாநாடு, . பெரும்பாலனவர்களின் பெருத்த ஆதரவுடன் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இம்மாநாட்டினை இவ்வமைப்பு வெற்றிகரமாகவே நடத்திக்கொண்டிருக்கிறது இடையில் சில இடைவெளிகள் விட்டு மீண்டும் இதை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கின்றனர் இவ்வமைப்பினர், ஆனால் இதற்க்கு பெரும் ஆதரவு தெரிவித்து வந்த சிலர் தற்பொழுது இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் முன்பேதும் இல்லாத அளவுக்கு இம்மாநாட்டிற்கு ஆதரவு பெருகி வரும் அதே வேலையில் ஒருபுறம் எதிர்ப்பும் பெருகி வருவதற்கான காரணம் என்ன?,
இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிலரை விசாரித்ததில், சேவைகளை பலவாறு செய்வதில் அதிரைபைதுல்மாலை மிஞ்சுவதில் வேறு எந்த அமைப்பும் நெருங்க முடியாது என்று ஒத்துகொள்ளும் அவர்கள் இம்மாநாட்டினை ஒரு வீண் செலவாகவே கணிக்கின்றனர் இதற்காகும் செலவை வேறு ஏதேனும் உதவிக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்பது அவர்களின் வாதம்.
                                                                                                                                         
பல்வேறு சேவைகளை செய்துவரும் இவ்வமைப்பு ஒவ்வொரு சேவைகளுக்கும் தனி தனி பொறுப்புதாரிகளை நியமித்து திட்டமிடப்பட்ட சேவைகளை அந்தந்த பொறுப்புதாரிகளின் மேலாண்மையில் சிறப்பாகவே செய்து வருகின்றனர். திருக்குர்ஆன் மாநாடு என்பது இதன் சிறப்பான செயல்பாடுகளில் முக்கியமானது, காரணம், இம்மாநாட்டில் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்களை அழைத்து நல்ல கருத்துக்களை மக்களுக்கு எத்திவைப்பதும் ஒரு சேவையே, மேலும் பேச்சாளர்களின் சிறப்புரை மட்டுமல்லாது மாணவ மாணவிகளுக்கான மார்க்க சம்மந்தமான அறிவுப்போட்டிகள், இன்னும் குர்ஆன்  சம்மந்தமான போட்டிகள் வைத்து, அவர்களை ஊக்குவிப்பதும் அதி முக்கியமானது,  இதெல்லாம் தேவயில்லை என்பது  இம்மாநாட்டினை எதிர்பவர்களின் வாதமா?
முன்பு நடத்தப்பட்ட மாநாட்டிற்கு தனி வசூல் வைத்து, அதைக்கொண்டே நடத்தினர், அதற்க்கு கடும் எதிர்ப்பு வரவே, இதற்க்கு ஆதரவாக இருக்கும் ஒரு சில செல்வந்தர்களிடம் மொத்த செலவையும் ஏற்றுகொள்ள செய்து தற்போது இம்மாநாட்டினை நடத்திக்கொண்டிருக்கின்றனர். திருக்குர்ஆன் மாநாட்டுக்கு என்று ஒதுக்கும் பணத்தை வேறு சேவைக்கு சிபாரிசு செய்வதில் அர்த்தமில்லை. ஒவ்வொன்றிற்கும் தனிதனி ஒதுக்கீடு செய்தே சேவைகள் செய்யப்படுகின்றன.
இவ்வமைப்பை ஒருகாலத்தில் கடுமையாக எதிர்த்தவர்கள், தற்பொழுது ஆதரவு கரம் நீட்டிக்கொண்டிருக்கும் இவேலையில் இதை மேலும் மெருகேற்ற செய்வதில்தான் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.

உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும்இதை அதிரை பைத்துல்மாலின் செயல்பாடுகளை கண்டு பொறாமை கொள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


அதிரையின் நன்மை விரும்பி.

1 comment: